465
திருவருணை
தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் தனதான
பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
பயனுயிர்ப் போயகப்
படமோகப்
படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
படரெரிக் கூடுவிட்
டலைநீரிற்
பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்
பிணிகளுக் கேயிளைத்
துழல்நாயேன்
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்
பிரியமுற் றோதிடப்
பெறுவேனோ
கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
கமைவயற் றாசையக்
கழலோர்முன்
கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
கடவுள்செச் சேவல்கைக்
கொடியோனென்
றரியநற் பாடலைத் தெரியுமுற் றோர்கிளைக்
கருணையிற் கோபுரத்
துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலை காசையுற்
றயருமச் சேவகப்
பெருமாளே
பதம் பிரித்து உரை
பரிய கை பாசம் விட்டு எறியும் அ
காலனுள்
பயன் உயிர் போய் அகப்பட மோகம்
பரிய கை - பருத்தான கைகளிலினால்
பாசம் விட்டு எரியும் - பாசக் கயிற்றை விட்டு வீசும்
அக்காலனுள் – அந்தக் காலனிடத்தே
பயன் உயிர் போய் - பயன் தரும் இந்த உயிர் போய்
அகப்பட - அகப்பட்டுக் கொள்ள
மோகம் - ஆசை வைத்து
படியில் உற்றார் என பலர்கள்
பற்றா அடல்
படர் எரி கூடு விட்டு அலை
நீரில்
படியில் உற்றார் - பூமியில் உற்றார்
என - சுற்றத்தார் எனப்படும்
பலர்கள் - பலரும்
பற்றா - என் உடலைப் பற்றி
அடல் படர் - பலமாகப் படர்ந்து
எரி - எரிகின்ற நெருப்பில்
கூடு விட்டு - இந்த உடலைப் போட்டு விட்டு
அலை நீரில் - அலை வீசும் நீரில் குளித்து
பிரியும் இப்பாதக பிறவி உற்றே மிக
பிணிகளுக்கே இளைத்து உழல்
நாயேன்
பிரியும் - பிரிந்து போகின்ற
இப்பாதக - இந்தப் பாபத்துக்கு இடந்தருகின்ற
பிறவி உற்று பிறவியை அடைந்து
மிகப் பிணிகளுக்கே - மிக்க நோய்களால்
இளைத்து - இளைத்து
உழல் நாயேன் - திரிகின்ற அடியேனுடைய
பிழை பொறுத்தாய் என பழுது
அறுத்து தாள் என
பிரியம் உற்று ஓதிட பெறுவேனோ
பிழை பொறுத்தாய் என - பிழைகளைப் பொறுத்தவனே
என- என்றும்
பழுது அறுத்து - என் குற்றங்களைக் களைந்து
ஆள் என - ஆண்டருள் என்றும்
பிரியம் உற்று - அன்பு கொண்டு
ஓதிடப் பெறுவேனோ - ஓதிப் புகழும் பாக்கியத்தைப் பெறுவேனோ – பெற மாட்டேனோ?
கரிய மெய் கோலம் உற்ற அரியின்
தாமரைக்கு
அமைவ பற்று ஆசை அ கழலோர் முன்
கரிய மெய்க் கோலம் உற்ற - கரு நிறம் கொண்ட
அரியின் திருமாலின்
நல் தாமரைக்கு அமைவ - நல்ல தாமரைக்கு ஒப்பான கண்ணையே
பற்று ஆசை - (மலராகக் கொள்வதற்கு) ஆசை கொண்ட
அக்கழலோர் முன் - அந்தத் திருவடியை உடைய சிவ பெருமான் முன்
கலை வகுத்து ஓதி வெற்பு அது தொளைத்தோன் இயல்
கடவுள் செச்சேவல் கை கொடியோன்
என்று
கலை வகுத்து - கலை நூல் கருத்தை
எடுத்து ஓதி - (தேவாரப் பாக்களாக) ஓதியவன்
வெற்பு அது - கிரவுஞ்ச மலையை
தொளைத்தோன் - தொளை செய்தவன்
இயல் கடவுள் - தகுதி வாய்ந்த கடவுள்
செச் சேவல் - சிவந்த சேவல்
கைக்கொடியோன் கொடியைக் கையில் கொண்டவன்
என்று - என்று
அரிய
நல் பாடலை தெரியும் உற்றோர் கிளைக்கு
அருணையில் கோபுரத்து உறைவோனே
அரிய - அருமையான
நல் பாடலை - நல்ல பாடல்களை
தெரியும் உற்றோர் - தெரிந்து கூறி அடைவோர்
கிளைக்கு - கூட்டத்துக்கு (அருள் புரிய)
அருணையில் - திருவண்ணாமலையில்
கோபுரத்து உறைவோனே - (வட) கோபுரத்து உறைவோனே
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசை உற்று
அயரும் அ சேவக பெருமாளே
அடவியில் - காட்டில் (வாழும்)
தோகை - மயில் போன்ற வள்ளியின்
பொன் - அழகிய
தட முலைக்கு - பெரிய கொங்கை மீது
ஆசை உற்று - ஆசை பூண்டு
அயரும் - தளர்ச்சி கொண்ட
சேவகப் பெருமாளே - வலிமை வாய்ந்த பெருமாளே
சுருக்க உரை
பெரிய
பாசக் கயிற்றை விட்டு வீசும் அந்தக் காலனிடத்து உயிர் போன பின், உறவினர் நெருப்பில் உடலை வைத்து, நீரில் குளித்துப் பிரிந்து
போகும் இந்தப் பாபத்துக்கு இடமான பிறவியை அடைந்து, நோயால் வருந்தித்
திரிகின்ற அடியேனுடைய பிழை பொறுத்தவனே என்றும், என் குற்றங்களைக்
களைந்து என்னை ஆண்டு கொள்வாய் என்றும் கூறி, அன்புடன் உன்னை ஓதிப்
புகழும் பாக்கியத்தைப் பெறுவேனோ?
கரிய
நிறம் கொண்ட திருமாலின் தாமரை போன்ற கண்களையே கொடுத்த சிவபெருமான் முன் தேவாரப் பாடலகளைச்
சம்பந்தராக வந்து ஓதியவன்,
கிரவுஞ்ச
மலையைத் தொளை செய்தவன், தகுதி வாய்ந்த கடவுள்,
சிவந்த சேவல் கொடியைக் கையில் ஏந்தியவன், அடியார்களுக்கு
நல்ல பாடல்களைக் கூறி அருள் புரிபவன், திருவண்ணாமலை கோபுரத்தில்
உறைபவன் ஆகிய முருகன், வள்ளியின் கொங்கை மீது ஆசை கொண்டு,
தளர்ச்சி பூண்ட வலிமையான பெருமாளே உன்னை அன்புடன் ஓதிடப் பெறுவேனோ?
விளக்கக் குறிப்புகள்
தாமரைக்கு அமைவ பற்று ஆசை
இது திருமால் கண் மலரிட்டு சிவபெருமானைப் பூசித்த வரலாறு.
ஜலந்திரனைவதைத்த சக்ராயுதத்தைப் பெறும் பொருட்டித் திருவீழி மிழலையில் நாராயணர்
தமரைக்குளம் அமைத்து நாள்தோறும் ஆயிரம் மலர்களால் அர்ச்சித்து வந்தார். அவருடைய
அன்பின் திறத்தை உலகுக்கு அறிவிக்க வேண்டி சிவன் ஒரு நாள் ஒரு மலரை
மறைத்துவிட்டார். ஒருமலர் குறையக்கண்டுதிருமால் தனது தாமரை போன்ற கண்ணை எடுத்து
அர்ச்சித்தார்.
விளக்கக் குறிப்புகள்
தாமரைக்கு அமைவ பற்று ஆசை
இது திருமால் கண் மலரிட்டு
சிவபெருமானைப் பூசித்த வரலாறு. ஜலந்திரனைவதைத்த சக்ராயுதத்தைப் பெறும் பொருட்டித்
திருவீழி மிழலையில் நாராயணர் தமரைக்குளம் அமைத்து நாள்தோறும் ஆயிரம் மலர்களால்
அர்ச்சித்து வந்தார். அவருடைய அன்பின் திறத்தை உலகுக்கு அறிவிக்க வேண்டி சிவன் ஒரு
நாள் ஒரு மலரை மறைத்துவிட்டார். ஒருமலர் குறையக்கண்டுதிருமால் தனது தாமரை போன்ற கண்ணை எடுத்து அர்ச்சித்தார்
(படர்புவியின்) என்ற பாடலைக் காண்க
இராகன் மலரணிஜ புராணர்க்கு
மராகலை
இராஜ சொல வாரணர்க்கு
இளையோனே திருப்புகழ், நிராமய
அருணையில் கோபுரத்துள் உறைவோனே
அடலரு ணைக்கோபுரத் தேய்ந்த வாயிலுக்கு...... கந்தர் அலங்காரம்
பாடலை கேட்க Rev 9-8-2022