403
பொது
தனந்தா தனந்தா தனந்தா தனந்தா
தனந்தான தந்த தனதான
பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்
ப்ரியங்கூர வந்து கருவூறிப்
பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார்
நடந்தார்த ளர்ந்து பிணமானார்
அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள்
அலங்கார நன்றி தெனமூழ்கி
அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்
அலந்தேனை யஞ்ச லெனவேணும்
இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ
கவெங்கேம டந்தை யெனவேகி
எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீ
யிடுங்காவ லன்றன் மருகோனே
பொருங்கார் முகம்பா ணிகொண்டே யிறைஞ்சார்
புறஞ்சாய அம்பு தொடும்வேடர்
புனங்கா வலங்கோ தைபங்கா வபங்கா
புகழ்ந்தோது மண்டர் பெருமாளே
பதம் பிரித்து உரை
பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால்
ப்ரியம் கூர வந்து கரு ஊறி
பெரும் காரியம் போல்
- பெரிய காரியத்தைச்
சாதிப்பதற்கு வந்தது போல் வரும் - வந்துள்ளதும் கேடும் - அழிவுக்கு இடமானதுமான உடம்பால் - இந்த உடம்பிடத்தே ப்ரியம் கூர வந்து - அன்பு மிகுந்து வந்து கரு ஊறி - கருவில் ஊறி
பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார்
நடந்தார் தளர்ந்து பிணம் ஆனார்
பிறந்தார் - பிறந்தார் என்றும் கிடந்தார் - இங்கு தான் படுத்து இருந்தார் என்றும் இருந்தார் - இருந்தார் என்றும். தவழ்ந்தார்
- தவழ்ந்தார்
என்றும் நடந்தார் - நடந்தார் என்றும் தளர்ந்தார் - தளர்ந்தார் என்றும் பிணம் ஆனார்
- பிணமானார் என்றும் (கூறுதற்கு இடமானவுடன்)
அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள்
அலங்கார் நன்று இது என மூழ்கி
அரும் கான் மருங்கே - அரிய சுடுகாட்டின் பக்கம் எடுங்கோள் - எடுத்துச் செல்லுங்கள் சுடுங்கோள் - அங்கே சுடுங்கோள் அலங்கார(ம்) நன்று - பிணக் கோலம் நன்றே அமைந்துள்ளது என - என்று கூறி மூழ்கி - தண்ணீரில் முழுகி.
அகன்று ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால்
அலந்தேனை அஞ்சல் என வேணும்
அகன்று - அங்கிருந்து பிரிந்து போய்.
ஆசையும் போய் - இருந்த பாசமும் போய் விழும் பாழ் - விழுந்து பாழாகும் உடம்பால் - இவ்வுடலால் அலந்தேனை - மனக் கலக்கமும் துக்கமும் அடையும் என்னை அஞ்சல் - பயப்பட வேண்டாம் என வேணும் - என்று நீ கூற வரவேணும்.
இரும் கானகம் போய் இளம் காளை பின் போக
எங்கே மடந்தை என ஏகி
இரும் கனகம் போய் - பெரிய காட்டகத்தே சென்று. இளம் காளை - இளைய வீரனாகிய தம்பி இலக்குமணன் பின் போக - பின் தொடர்ந்து போக. எங்கே மடந்தை
- (காணாது போன)
சீதை எங்கே. என ஏகி - என்று தேடிச் சென்று.
எழுந்தே குரங்கால் இலங்கா புரி தீ
இடும் காவலன் தன் மருகோனே
எழுந்தே - புறப்பட்டு குரங்கால் - அநுமன் என்னும் குரங்கைக் கொண்டு இலங்கா புரம் - இலங்கைப் பட்டணத்தை. தீ இடும் - நெருப்பு வைத்த. காவலன் தன் மருகோனே - அரசனான இராம பிரானுடைய மருகோனே - மருகனே
பொரும் கார் முகம் பாணி கொண்டே இறைஞ்சார்
புறம் சாய அம்பு தொடும் வேலா
பொரும் - சண்டை செய்யும். கார் முகம் - வில்லை. பாணி கொண்டே - கையில் கொண்டவராய். இறைஞ்சார் - தம்மை வணங்காதவர்களுடைய. புறம் சாய - வீரம் அழியும்படி. அம்பு தொடும்
வேடர் - அம்புகளைச் செலுத்தும் வேடர்களின்.
புனம் காவல் அம் கோதை பங்கா அபங்கா
புகழ்ந்து ஓதும் அண்டர் பெருமாளே.
புனம் காவல் அம் கோதை
- தினைப் புனத்தைக்
காவல் இருந்த பங்கா - வள்ளியின் பங்கனே அபங்கா - நாசம் இல்லாதாவனே புகழ்ந்து ஓதும்
புகழ்ந்து ஓதுகின்ற அண்டர் பெருமாளே - தேவர்கள்
பெருமாளே
சுருக்க உரை
நிலை
இல்லாத உடம்பின் மேல் ஆசைப்பட்டு, கருவில் தோன்றி, பிறந்தார், படுத்தார், இருந்தார்,
தவழ்ந்தார், நடந்தார், முடிவில் தளர்ந்து பிணமானார் என்றவுடன், சுடுகாட்டுக்கு உடலை
எடுத்துச் சென்று, எரியிட்டு, நீரில் முழுகி, ஆசையும், பாசமும் போய், மனக் கலக்கம்
அடையும் என்னை, பயப்படாதே என்று கூறி, நீ என்
முன்னே வரவேண்டும்.
பெரிய
காட்டுக்கு, இளையவனான இலக்குவனுடன் போய், காணாமல் போன சீதையைத் தேடிச் சென்று, அனுமன்
உதவியால் இலங்கைப் பட்டணத்துக்குத் தீ வைத்து, சீதையை மீட்ட இராமனின் மருகனே, வேடர்களின்
வீரம் அழியும்படி, தினைப்புனம் காத்த வள்ளியின் பங்கனே, என்றும் அழிவு இல்லாதவனே, இறக்கும்
போது என்னை அஞ்சாதே என்று கூற நீ வந்து அருள் புரிவாய்.
ஒப்புக
1.பிறந்தார் கிடந்தார்
இருந்தார்....
நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்...சுந்தரர் தேவாரம்
புன்னினுமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியெ செயக அறவினை இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேளலறச்
சென்றான் எனப்படுதலால். ..நாலடியார்
2 என மூழ்கி அகன்று.....
நீரில்
படிந்துவிடு பாசத் தகன்று உனது சற்போதகம் ருப்புகழ்,
இத்தாரணிக்குள்
3.
குரங்கால் இலங்கா
புரந்தீ...
இடுங்கனல்
குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள்
முகுந்தனன் மருகோனே
...திருப்புகழ், தலங்களில்
வனக்
குரங்கேவி யழற்புகையிட்
டிளந்தாது
மலர்த் திருவைச் சிறைமீளும்
...திருப்புகழ் அலங்கார
No comments:
Post a Comment