பின் தொடர்வோர்

Wednesday, 8 September 2021

470.விரகொடு



திருவருணை

 

          தனதன தனனந் தனதன தனனந்

                   தனதன தனனந்               தனதான

 

விரகொடு வளைசங் கடமது தருவெம்

  பிணிகொடு விழிவெங்            கனல்போல

வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்

  றெனவிதி வழிவந்               திடுபோதிற்

கரவட மதுபொங் கிடுமென மொடுமங்

 கையருற வினர்கண்              புனல்பாயுங்

கலகமும் வருமுன் குலவினை களையுங்

 கழல்தொழு மியல்தந்            தருள்வாயே

பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்

 படவர வணைகண்              டுயில்மாலம்

பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்

 பயமற விடமுண்                  டெருதேறி

அரவொடு மதியம் பொறிசடை மிசைகங்

 கையுமுற அனலங்              கையில்மேவ

அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்

 கருணையில் மருவும்             பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

விரகொடு வளை சங்கடம் அது தரு வெம்

பிணி கொடு விழி வெம் கனல் போல

விரகொடு - சாமர்த்தியத்துடன் வளை - சூழ்ந்து சங்கடம் அது தரு - துன்பத்தைத் தருகின்ற வெம் - கொடிய பிணி - பாசக் கயிற்றைக் கொண்டு விழி - கண்கள் வெம் கனல் போல - தீய நெருப்புப் போல

 வெறி கொடு சமனின் நின்று உயிர் கொள்ளும் நெறி இன்று

என விதி வழி வந்திடு போதில்

வெறி கொண்டு - கோபத்துடன் சமன் - நமன் நின்று - ஆய்ந்து உயிர் கொ(ள்)ளு - உயிரைக் கொள்ள வேண்டிய நெறி இன்று என - முறை நாள் இது என்று தெரிந்து விதி வழி - விதியின் ஏற்பாட்டின்படி வந்திடு போதில் - வரும் அச்சமயத்தில்

 கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர்

உறவினர் கண் புனல் பாயும்

கரவடம் அது - வஞ்சகம் பொங்கிடும் - மிகுந்த மனமொடு - மனத்துடன் மங்கையர் - மாதர்கள் உறவினர்கள் - சுற்றத்தார்கள் கண் புனல் பாயும் - கண்களில் நீர் பாய்கின்ற

 

கலகமும் வரு முன் குல வினை களையும்

கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே

கலகமும் - குழப்பம் வருமுன் - வருவதற்கு முன்பாக குல - கூட்டமான வினை - ஊழ் வினைகளை களையும் - தொலைக்கும் கழல் தொழும் – திருவடிகளைத் துதிக்கும் இயல் - ஒழுக்கத்தை தந்து அருள்வாயே - கொடுத்து அருள் புரிவாயாக

 பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும்

பட அரவு அணை கண் துயில் மால் அம்

பரவிடும் அவர் - (தம்மைப்) போற்றுகின்றவர்களுடைய சிந்தையர் - மனத்தில் உறைபவர் விடம் உமிழும் - நஞ்சைக் கக்கும் பட அரவு - படத்தை உடைய பாம்பு (ஆதிசேடன்) அணை கண் - படுக்கையில் துயில் - உறங்கும் மால் - திருமால் அம் – அழகிய

பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம்

பயம் அற விடம் உண்டு எருது ஏறி

 பழ மறை - பழைய வேதத்தை மொழி - ஓதும் பங்கயன் - தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் இமையவர் தம் - தேவர்கள் ஆகிய இவர்களுடைய பயம் அற - பயம் நீங்க விடம் - ஆலகால விடத்தை உண்டு - உட்கொண்டு எருது ஏறி - இடப வாகனத்தின் மேல் ஏறி

 அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும்

உற அனல் அம் கையில் மேவ

அரவொடு - பாம்புடன் மதியம் பொதி - சந்திரனையும் தரித்த சடை மிசை - சடையின் மேல் கங்கையும் உற - கங்கையையும் பொருந்த அனல் அம் கயில் மேவ - நெருப்பு அழகிய கையில் பொருந்த

 அரிவையும் ஒரு பங்கு இடை உடையார் தங்கு

அருணையில் மருவும் பெருமாளே

 அரிவையும் - தேவியை ஒரு பங்கிடை - ஒரு பாகத்தில் உடை அவர் தங்கு - கொண்டவராகிய (சிவ பெருமான்) வீற்றிருக்கும் அருணையில் - திருவண்ணாமலையில் மருவும் பெருமாளே - எழுந்தருளியுள்ள பெருமாளே

 

சுருக்க உரை

 

சாமர்த்தியத்துடன் சூழ்ந்து துன்பம் தரக் கூடிய பாசக் கயிற்றைக் கொண்டு, கொடிய கண்களுடன் யமன் விதி முறைப்படி உயிரைக் கொண்டு போக வரும் அந்தச்சமயத்தில், மாதர்களும் உறவினர்களும், கண்களில் நீர் வழியும் அச்சமயத்தில், வினைகளை நீக்கும் உன் திருவடிகளைத் தொழும்படியான நல்ல ஒழுக்கத்தைத் தந்து அருள்வாயாக!

 பழைய வேதத்தை ஓதும் பிரமனும், திருமாலும், தேவர்களும் கொண்ட பயத்தை நீக்கும் பொருட்டு ஆலகால விடத்தை உண்டு, இடப வாகனத்தின் மேல் ஏறி, பாம்பு, திங்கள், கங்கை ஆகியவைகளைத் தரித்த சடையும், கையில் நெருப்பும் ஏந்திஉமையை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான் வீற்றிருக்கும் திருவண்ணாமலையில் உறையும் பெருமாளே! நான் இறக்கும் தருவாயிலாவது உன் திருவடிகளைத் தொழும்படியான ஒழுக்கத்தை தந்து அருளுக

 

 

விளக்கக் குறிப்புகள்

 

கருவிலிருந்து குழந்தை உருவாகி பூமியில் சேர்ந்து உடல் வளர்ச்சி இப்பாடலில்   குறிக்கப்பட்டுள்ளது இந்தக் கருத்தை விளக்கும் மற்ற திருப்புகழ்ப் பாடல்கள்:

    

அறுகுநுனி, இத்தாரணிக்குள், வாதினைய்ட, சுக்கிலச்சுரொ

 

பேரொலி எழுப்பும் பண்டைக்கால வாத்தியங்கள் இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ளன.    அந்த ஒலிகளுக்கு ஏற்ப சந்தங்களை அமைத்த அழகு அருணகிரி நாதரின் தமிழ்.   இலக்கியத் திறமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்

 

சந்தப் பலபடை செறித்த

   பதினோர் உருத்திரரும் முருக வேளுக்குப் படையாம்.

    உருத்திர கணத்தோர் நவிலருந் தோமரம் கொடி வாள்

   வன்திறற் குலிசம் பகழி அங்குசமும் மணி

   மலர்ப்பங்கயம் தண்டம் வெந்றிவில் மழுவும் ஆகி

   வீற்றிருந்தார் விறல்மிகு அறுமுகன் கரத்தில்)கந்த புராணம்


பாடலை கேட்க                                Rev 9-8-2022

No comments:

Post a Comment