பின் தொடர்வோர்

Showing posts with label ’ வள்ளி. Show all posts
Showing posts with label ’ வள்ளி. Show all posts

Sunday, 6 March 2022

488. நாடா பிறப்பு

 

488. சிதம்பரம்

 




                தானா தனத்ததன தானா தனத்ததன                   

                    தானா தனத்ததன                 தனதான

 

நாடா பிறப்புமுடி யாதோ வெனக் கருதி

        நாயே னரற்றுமொழி                        வினையாயின்

நாதா திருச்சபையி னேறாது சித்தமென

        நாலா வகைக்குமுன                                  தருள்பேசி

வாடா மலர்ப்பதவி தாதா எனக் குழறி

        வாய்பாறி நிற்குமெனை                           அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது

        வாரே னெனக்கெதிர்முன்                  வரவேணும்

சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி

         தோலா சனத்தியுமை                             யருள்பாலா

தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த

        தோழா கடப்பமல                                   ரணிவோனே

ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு

        மேராள் குறத்திதிரு                                   மணவாளா

ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை

         ஈடேற வைத்தபுகழ்                                 பெருமாளே.

 

பதம் பிரித்து உரை  

 நாடா பிறப்பு முடியாதோ என கருதி

நாயேன் அரற்று மொழி வினையாயின்

நாடா - ஆராய்ந்து  பிறப்பு முடியாதோ என - (ஓயாது வரும்) இப்பிறவிகள் முடிவு பெறாதோ என்று கருதி - (கவலையுடன்) எண்ணி    நாயேன் -    அடியேன் அரற்று மொழி - கூச்சலிடும் இந்த    வார்த்தை வினையாயின் - நான் முன் செய்த வினையின் பயனால் என்பதாக இருப்பின்

நாதா மலர் பதவி தா தா என குழறி

வாய் பாறி நிற்கும் எனை அருள் கூர

நாதா - தலைவனே திருச் சபையில் - (நான்)     உன் சபா மண்டபத்தில் ஏறாது சித்தம் என – என் முறையீடு ஏற்றுக் கொள்ள மாட்டாதென உன் மனதில்  இருக்கும்    எண்ணத்தை நான் உணர்ந்து  நாலா வகைக்கும் - பலவாறாக உனது அருள் பேசி -    உனது திருவருள் பெருமையையே பேசி

வாடா மலர்ப்பதவி தா தா எனக் குழறி

 வாய்பாறி நிற்கும் எனை   அருள்கூர

வாடா - என்றும் அழியாத மலர்ப் பதவி -    உனது  திருவடி மலர் என்னும்   பதவியை (முத்தியை) தா தா என -   கொடுத்தருள், கொடுத்தருள் என்று குழறி - குழறி [கூறி] வாய் பாறி - வாய் கிழிபட்டு    நிற்கும் எனை - ஓலமிட்டு நிற்கும் என்னை    அருள் கூர – அதிகப் படியான திருவருள் கூடும்படி.

வாராய் மன கவலை தீராய் நினை தொழுது

வாரேன் எனக்கு எதிர் வரவேணும்


வாராய் - வந்தருளுக  மனக் கவலை தீராய் – என்னுடைய மனத் துயரத்தைத்    தீர்ப்பாயாக  நினை – உன்னை தொழுது    வாரேன் - தொழுது வருதல் என்பதே இல்லாத எனக்கும் - அடியேனுக்கும் எதிர் முன் வர வேணும் – முன்னே எழுந்தருளி வர வேண்டுகின்றேன்.

சூடா மணி பிரபை ரூபா கனத்த அரி

தோல் ஆசனத்தி உமை அருள் பாலா

சூடா மணிப் பிரபை – சூடாமனி போன்ற ஒளி உடைய  ரூபா - உருவத்தினள் கனத்த அரி -    பெருமை வாய்ந்த சிங்கத்தின் தோல் ஆசனத்தி - தோலை இருப்பிடமாகக்   கொண்டவள் (ஆகிய) உமை அருள் பாலா -    உமை தேவி அருளிய குழந்தையே.

தூயா துதிப்பவர்கள் நேயா எமக்கு அமிர்த

தோழா கடப்ப மலர்  அணிவோனே

தூயா - பரிசுத்த மூர்த்தியே துதித்தவர்கள் நேயா – உன்னைத் தொழுபவர்களின் நேயனே  எமக்கு அமிர்த தோழா – எனக்கு  [என் போன்றவர்களுக்கும்] அமுதம்     போல இனிமையான நண்பனே கடப்ப மலர் அணிவோனே - கடப்ப    மலர்    மாலையை அணிபவனே

ஏடு ஆர் குழல் சுருபி ஞான ஆதனத்தி மிகு

மேராள் குறத்தி திரு மணவாளா

ஏடு ஆர் - மலர் நிறைந்த  குழல் -    கூந்தலை  உடைய   சுருபி [ஸ்வரூபி]    - வடிவத்தினளும் ஞான ஆதனத்தி – ஞானத்தையே ஆஸனமாக உடையவளும் மிகு மேராள்  - மிக்க அழகு           உடையவளும் (ஆகிய) குறத்தி திரு மணவாளா – குறவர்களிடம் வளர்ந்த வள்ளியின் கணவனே

ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை

ஈடேற வைத்த புகழ் பெருமாளே.

ஈசா - ஈசனே தனி - ஒப்பற்ற புலிசை வாழ்வே - சிதம்பரத்தில் வாழும் செல்வனே சுரர் திரளை - தேவர் கூட்டத்தை  ஈடேற வைத்த    - வாழ்வித்த புகழ் பெருமாளே -   புகழைக் கொண்ட பெருமாளே.

 சுருக்க உரை

என் பிறப்புக்கள் ஒழியாதோ என்று நான் ஓலமிடும் இந்தச் சொற்கள் நான் முன்பு செய்த வினையின் பயனாக இருந்தால், நாதனே, அது உன்னால் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என்பதை நான் உணர்ந்து, பல விதங்களில் உன் பெருமையைப் பேசி, என்றும் நிலையான உனது திருவடிகளில் பதவியைக் கொடுத்தருளுக என்று பல முறை உன் முன்னே வாய் கிழியக் கூறி நிற்கும் என் முன்னே எழுந்தருளி வர வேண்டும்.

 சூடாமணி போன்ற ஒளி விளங்கும் உருவம் கொண்டவளும், சிங்கத்தின் தோலை ஆசனமாகக் கொண்டவளும் ஆகிய உமா தேவியின் குழந்தையே ! தூயவனே. உன்னைத் துதிப் போர்க்கு நேயனே ! எனக்கு அமுதம் போல் இனிய நண்பனே ! மிக்க அழகுள்ள வள்ளியின் கணவனே ! சிதம்பரத்தில் வாழும் செல்வனே ! தேவர்கள் கூட்டத்தை வாழ வைத்த புகழைக் கொண்ட பெருமாளே ! என் முன்னே வர வேண்டுகின்றேன்.

விளக்கக் குறிப்புகள்

 துதித்தவர்கள் நேயா...

சுந்தரருக்கு சிவ பெருமான் தோழனாக இருந்ததைப் போல் தனக்கும் நண்பனாக    இருக்குமாறு அருணகிரி நாதர் முருக வேளைப் பிரார்த்திக்கின்றார்.

ஏழ் இசையாய் இசைப்பயனாய், இன் அமுதாய், என்னுடைய

தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி.

                ..... சுந்தரர்  தேவாரம்.

 rev 30-5-2022

பாடலை கேட்க




Sunday, 5 September 2021

467. பேதகவிரோத

 

467

திருவருணை

           தானதன தானத் தானதன தானத்

               தானதன தானத்               தனதான

 

பேதகவி ரோதத் தோதகவி நோதப்

   பேதையர்கு லாவைக்              கண்டுமாலின்

பேதைமையு றாமற் றேதமக லாமற்

    பேதவுடல் பேணித்                தென்படாதே

சாதகவி காரச் சாதலவை போகத்

   தாழ்விலுயி ராகச்                சிந்தையாலுன்

தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்

   சாரல்மற மானைச்                சிந்தியேனோ

போதகம யூரப் போதகக டாமற்

   போதருணை வீதிக்                 கந்தவேளே

போதகக லாபக் கோதைமுது வானிற்

   போனசிறை மீளச்                  சென்றவேலா

பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்

   பாருலகு வாழக்                   கண்டகோவே

பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்

   பாடுமவர் தோழத்                   தம்பிரானே

 

பதம் பிரித்து உரை 

பேதக விரோத தோதக விநோத

பேதையர் குலாவை கண்டு மாலின்

 

பேதக - மனம் வேறுபட்ட 

விரோத - பகைமை 

தோதக - வஞ்சகம், இவைகளைக் கொண்ட 

விநோத - விசித்திரமான 

பேதையர் - பேதையராகிய மங்கையர்கள் 

குலாவை - மகிழ்ச்சியுடன் உறவாடுதலை 

கண்டு - பார்த்து 

மாலின் - மோகத்தால் 

பேதைமை உறா மற்று ஏதம் அகலாமல்

பேத உடல் பேணி தென் படாதே

 

பேதைமை உறா - அறியாமை உற்று 

மற்று ஏதம் – அதனால் குற்றம் குறைகள் 

அகலாமல் - என்னை விட்டு நீங்காமல் 

பேதம் - மாறுதலை அடையும் 

உடல் பேணி – உடலை விரும்பிப் பாதுகாத்து 

தென் படாதே - வெளியே உலவாமல்

சாதக(ம்) விகார சாதல் அவை போக

தாழ்வில் உயிராக சிந்தையால் உன்

 

சாதக(ம்) - பிறப்பும் 

விகாரம் - (பாலன், குமரன், கிழவன் என்னும் வேறுபாடும் 

சாதல் - இறப்பும்  

அவை போக – ஆகிய இவைகள் தொலைய 

தாழ்வு இல் - குறைவு இல்லாத உயிராக - என் உயிர் விளங்க 

சிந்தையால் – மனத்தால் 

தாரை வடிவேலை சேவல் தனை ஏனல்

சாரல் மற மானை சிந்தியேனோ

 

உன் தாரை - உனது புகழ் கொண்ட 

வடி வேலை – கூர்மையான வேலையும் 

சேவல் தனை - சேவலையும் 

ஏனல் சாரல் - தினைப் புன மலைச் சாரலில் இருந்த 

மற மானை - வேடர்களின் மான் போன்ற 

வள்ளியையும் சிந்தியேனோ - தியானிக்க மாட்டேனோ?

 

போதக மயூர போதக போது அக அகடு ஆ மன்

போது அருணை வீதி கந்த வேளே 

போதகம் - யானை 

மயூர(ம்) - மயில் (இவைகளின் மேல்) போது 

அக(ம்) - மலர் ஆசனம் இட்ட 

அகடு ஆ மன் போது -நடு இருப்பிடத்தில் எழுந்தருளி வருகின்ற 

அருணை வீதி -அண்ணாமலை வீதியில் உள்ள 
கந்த வேளே – கந்தப் பெருமானே 

போதக கலாப கோதை முது வானில்

போன சிறை மீள சென்ற வேலா

 

போதகம் - யானையாகிய ஐராவதம் வளர்த்த 

கலாபக் கோதை - மயில் போன்ற தேவசேனை 

வாழ்ந்த முது - பழைய 

வானில் – விண்ணுலகத்தார்

 போன - சென்றிருந்த 

சிறை மீள - சிறையினின்றும் அவர்கள் மீண்டு வர 

சென்ற – போருக்கு 

எழுந்த வேலா - வேலனே

 

பாதக பதாதி சூரன் முதல் வீழ

பார் உலகு வாழ கண்ட கோவே

 

பாதாக - பெரிய பாபச் செயல்களைச் செய்த 

பதாதி - காலாட்படைகளை உடைய 

சூரன் முதல் வீழ - சூரன் முதலானோர் வீழ்ந்து மடிய 

பார் உலகு வாழ - மண்ணுலகும், விண்ணுலகும்

வாழும் பொருட்டு கண்ட 

கோவே - கருணை புரிந்த தலைவனே 

பாத மலர் மீதில் போது மலர் தூவி

பாடும் அவர் தம்பிரானே 

 பாத மலர் மீதில் - உனது திருவடி மலரை நினைந்து போது 

மலர் தூவி - ஞான பூசனை செய்து 

பாடும் அவர் தோழ – பாடும் தொண்டர்களுடைய தோழனே 

தம்பிரானே - தம்பிரானே

 

சுருக்க உரை

பகைமையும் வஞ்சகமும் கொண்ட விலை மாதர்களுடன் உறவாடுவதால் என்அறியாமை அதிகரித்து, அதனால் ஏற்படும் குற்றங்கள் என்னை விட்டு நீங்காது, உடலை விரும்பிப் போற்றி, நான் வாழாமல், பிறப்பும், இறப்பும் தொலைந்து என் உயிர் விளங்கும் பொருட்டு, உனது கூர்மையான வேலையும், சேவலையும், வேடப் பெண் வள்ளியையும் தியானிக்க மாட்டேனோ?

யானை, மயில் இவைகளை நடுவில் அமைத்துத் திருவண்ணாமலை வீதியில் உள்ள கந்தவேளே! ஐராவதம் என்ற யானை வளர்த்த தேவசேனை வாழ்ந்த விண்ணுலகத்தோர் சிறையினின்று மீளும்படி போருக்கு எழுந்த வேலனே! சூரனும் அவனுடைய

சேனைகளும் மடியவும், மண்ணும் விண்ணும் வாழவும் கருணை புரிந்த தலைவனே! உனது திருவடி மலரை நினைத்து, ஞான பூசனை செய்யும் தொண்டர்களுடைய தோழனே! தம்பிரானே! வேல், சேவல், இவைகளையும், வள்ளி அம்மையையும் தியானிக்க மாட்டேனோ?

விளக்கக் குறிப்புகள்

போதகம் மயூரப் போது அக

அருள் செய்வதற்கும் போர் புரிவதற்கும் எழுந்தருளும் போது முருக வேள் பிணிமுகம்  என்னும் யானை மீது செல்வார் என்பர்

கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு      --------    பதிற்றுப் பத்து  

மாறாவென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய்யோனும் ------                                                                                                                   புறநானூறு  

சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கி                -    -----      பரிபாடல் 

ஓடாப் பூட்கை பிணிமுகம் வாழ்த்தி

வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட- திருமுருகாற்றுப் படை 

சாதக விகாரச் சாதல் - துன்பமான பிறப்பு இறப்பு


பாடலை கேட்க                   rev 9-8-2022