பின் தொடர்வோர்

Friday 26 March 2021

435புரைபடுஞ்

 


435

காஞ்சீபுரம்

 

 தனதனந் தத்தத் தத்தன தத்தந்

  தனதனந் தத்தத் தத்தன தத்தந்

  தனதனந் தத்தத் தத்தன தத்தந்   தனதான

 

புரைபடுஞ் செற்றைக் குற்றம னத்தன்

   தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்

   புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந்       துரிசாளன்

பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்

   சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்

   பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் கொடியேனின்

கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்

   கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்

   கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங்   கதிர்வேலுங்

கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்

   படிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்

   கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண்  டடைவேனோ

குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்

   கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்

   குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் றொருநேமிக்

குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங்

   கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்

   குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங்    குடியேறத்

தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன்

   சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்

   ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம்   பகையோடத்

தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்

   தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்

   சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும்   பெருமாளே.

 

பதம் பிரித்து உரை

 

புரை படும் செற்ற குற்ற மனத்தன்

தவம் இலன் சுத்த சத்ய அசத்யன்

புகல் இலன் சுற்ற செத்தையுள் நிற்கும் துரிசாளன்

 

புரை படும் = குற்றத்துக்கு இடமான செற்றம் = தணியாக் கோபம் முதலான குற்ற மனத்தன் = குற்றங்களைக் கொண்ட மனத்தை உடையவன் தவம் இலன் = தவம் என்பதே இல்லாதாவன் சுத்த = கலப்பில்லாத அசத்யன் = பொய்யன் புகல் இலன் = திக்கற்றவன் சுற்றச் செத்தையுள் = சுழற்சி உறும் குப்பை போல் நிற்கும் = நிற்கின்ற துரிசாளன் = துக்கம் கொண்டவன்

 

பொறை இலன் கொத்து தத்வ விகற்பம்

சகலமும் பற்றி பற்று அற நிற்கும்

பொருளுடன் பற்று சற்றும் இல் வெற்றன் கொடியேன் நின்

 

பொறை இலன் = பொறுமை இல்லாதவன் கொத்து = பல திறப்பட்ட தத்வ = உண்மைகளின். விகற்பம் சகலமும் = வேறுபாடுகள் எல்லாவற்றையும் பற்றி = பற்றி நின்றும் பற்று அற நிற்கும் = பற்று இன்றி நிற்கின்ற பொருளுடன் = மெய்ப்பொருள் மேல் பற்று சற்றும் இல் = பற்று கொஞ்சமேனும் இல்லாத வெற்றன் = பயனிலி கொடியேன் = பொல்லாதவன் நின் = உன்னுடைய

 

கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும்

கலை இலன் கட்டை புத்தியன் மட்டன்

கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும்

 

கரை அறும் = எல்லை இல்லாத சித்ர= அழகிய சொல் புகழ் = சொற்களால் அமைந்த புகழ் நூல்களை  கற்கும் = கற்கும் கலை இல்லாதவன் = ஞானம் இல்லாதவன் கட்டைப் புத்தியன் = மழுங்கிய புத்தி உடையவன் மட்டன் = மூடன் கதி இலன் = நற்கதி அடையும் பேறு இல்லாதவன் (ஆகிய நான்) செச்சை = வெட்சி மாலை அணிந்த பொன் = அழகிய புய வெற்பும் = புய மலைகளையும் கதிர் வேலும் = ஒளி வீசும் வேலயுதத்தையும்

 

[கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் - உன் எல்லையற்ற அழகிய புகழைக் கற்கும் கலை ஞானம் சிறிதும் இல்லாதவன் என்றும் பொருள் கொள்ளலாம்]

 

கதிரையும் சக்ர பொற்றையும் மற்றும்

பதிகளும் பொற்பு கச்சியும் முற்றும்

கனவிலும் சித்தத்தில் கருதி கொண்டு அடைவேனோ

 

கதிரையும் = கதிர்காமத்தையும் சக்ரப் பொற்றையும் = சக்ரவாள கிரியையும் மற்றும் = மற்றுமுள்ள தலங்களையும் கச்சியும் = கச்சிப் பதியையும் முற்றும் = ஆகிய உனது இருப்பிடங்கள் எல்லாவற்றையும் கனவிலும் = கனவிலும் (மறவாது) சித்தத்தில் கருதிக் கொண்டு = எனது சித்தத்தில் தியானித்துக் கொண்டு அடைவேனோ = உன்னை அடைய மாட்டேனோ?

 

குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம்

கதறி வெந்து உட்க் கண் புர(ம்) துட்டன்

குலம் அடங்க கெட்டு ஒழிய சென்று ஒரு நேமி

 

குரை தரும் = ஒலிக்கின்றதும் சுற்றும் = சுற்றி உள்ளதுமான சத்த சமுத்திரம் = ஏழு கடல்களும் கதறி = கதறி வெந்து =வெந்து. உட்க = அஞ்ச கண் புரம் = பெருமை தங்கிய. துட்டன் = (வீர மகேந்திர புரத்தில்) இருந்த துட்டனாகிய சூரனது குலம்அடங்க = குலம் முழுவதும் அடங்குமாறு கெட்டு ஒழிய = அடியோடு ஒழிய  சென்று = போய் ஒரு = ஒரு

 

குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம்

கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம்

குலிச அதுங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற

 

நேமி குவடு ஒதுங்க = சக்ரவாள கிரி ஒதுங்கி நிற்க சொர்க்கத்தர் = விண்ணுலகத்தார் இடுக்கம் கெட = துன்பம் தொலைய நடுங்கத் திக்கில் கிரி வர்க்கம் = திக்கில் உள்ள மலைக் கூட்டங்கள் எல்லாம் நடுக்கம் அடைய குலிச துங்கக் கை = குலிசாயுதத்தை ஏந்திய கையை உடைய கொற்றவன் = அரசனாகிய இந்திரன் நத்தம் குடி ஏற = தனது ஊரில் குடி ஏற.

 

தரை விசும்பை சிட்டித்த இருக்கன்

சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததம்

வந்திக்க பெற்றவர் தத்தம் பகை ஓட

 

தரை = மண்ணுலகத்தையும் விசும்பை = விண்ணுலகத்தையும் சிட்டித்த = படைத்த இருக்கன் = இருக்கு வேத வல்ல சதுர் முகன் = நான் முகன் சிட்சைப் பட்டு ஒழிய = தண்டனை அடைந்து விலக சந்ததமும் = எப்போதும் வந்திக்கப் பெற்றவர் = வணங்கப்படுபவர்களாகிய தேவர்களின் தத்தம் பகை ஓட = பகைவர்கள் ஓட்டம் பிடிக்க.

 

தகைய தண்டை பொன் சித்ர விசித்ர

தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும்

சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே.

 

தகைய = அழகிய தண்டை = தண்டையும் பொன் = பொன்னாலாகிய சித்ர = அழகிய. விசித்ரந் தரும் = விசித்திரமான சதங்கை = கிண்கிணியும் கொத்து ஒத்து = திரளும் தாள ஒத்துடன் முழக்கும் = ஒலி செய்ய சரண கஞ்சத்தில் = திருவடித் தாமரையில் பொன்  கழல் கட்டும் பெருமாளே = பொலிவுள்ள வீரக் கழலைக் கட்டும் பெருமாளே

 

சுருக்க உரை

 

கோபம் முதலிய குற்றங்களைக் கொண்ட மனம் உடையவன்: தவம் இல்லாதவன்: பொய்யன்: கதி அற்றவன்: துக்கம் நிறைந்தவன்: பொறுமை இல்லாதவன்: வேறுபாடுகள் பல இருப்பினும், எதிலும் பற்றில்லாமல் நிற்கும் மெய்ப் பொருள் மீது பற்று கொஞ்சமேனும் இல்லாதாவன்: எல்லை இல்லாத சொற்களால் அமைந்த நூல்களக் கற்கும் கலை ஞானம் இல்லாதவன்: மூடன். இத்தகைய இழி குணங்கள் படைத்த நான் உனது வெட்சி மாலை அணிந்த புய மலைகளையும், உன் வேலாயுதத்தையும், கதிர்காமம், சக்ரவாளக் கிரி, மற்றும் நீ இருக்கும் தலங்கள் எல்லாவற்றையும் கனவிலும் மறவாது, என் சித்தத்தில் தியானித்து உன்னை அடைய மாட்டேனோ?

 

ஏழு கடல்கள் வெந்து அஞ்ச, சூரன் குலத்துடன் அழிய, சக்ரவாள கிரி ஒதுங்கி நிற்க, விண்ணுலகோர் துன்பம் தொலைய, எட்டுத் திக்கில் உள்ள மலைகள் நடுக்கம் அடைய, இந்திரன் தன் ஊருக்குக் குடி போக, பிரமன் தண்டனை அடைய, தேவர்களின் பகைவர்கள் ஓட்டம் பிடிக்க,தண்டையும், கிண்கிணியும் ஒலி செய்ய, வீரக் கழல் கட்டும் பெருமாளே! நீ இருக்கும் திருத்தலங்களை மறவாது என் மனதில் தியானிக்க மாட்டேனோ?

 

விளக்கக் குறிப்புகள்

 

நேமிக் குவடு ஒதுங்க...

சக்ரகிரி யுங்குலைய விக்ரம் நடம்புரியு

மரகத கலபம் எரிவிடு      ...திருப்புகழ்,  இதமுறுவிரை.

 

இருக்கன் :  சிறக்கு மாதவ முனிவரர் மக பதி இருக்கு வேதனும் - திருப்புகழ், பெருக்கமாகிய

 

 

No comments:

Post a Comment