பின் தொடர்வோர்

Tuesday 8 February 2022

483. குகனேகுருபரனே

  

483


சிதம்பரம் 

              தனன தனதன தானன தந்தத்

                  தனன தனதன தானன தந்தத்

                  தனன தனதன தானன தந்தத்           தனதான 

 

குகனெ குருபர னேயென நெஞ்சிற்

     புகழ அருள்கொடு நாவினி லின்பக்

     குமுளி சிவவமு தூறுக வுந்திப்             பசியாறிக்

கொடிய இருவினை மூலமும் வஞ்சக்

     கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்

     குலைய நமசிவ யோமென கொஞ்சிக்    களிகூரப்

பகலு மிரவுமி லாவெளி யின்புக்

     குறுகி யிணையிலி நாடக செம்பொற்

     பரம கதியிது வாமென சிந்தித்              தழகாகப்

பவள மனதிரு மேனியு டன்பொற்

     சரண அடியவ ரார்மன வம்பொற்

     றருண சரண்மயி லேறியு னம்பொற்  கழல்தாராய்

தகுட தகுதகு தாதக தந்தத்

     திகுட திகுதிகு தீதக தொந்தத்

      தடுடு டுடுடுடு டாடக டிங்குட்               டியல்தாளம்

 தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்

     கரடி தமருகம் வீணைகள் பொங்கத்

     தடிய ழனவுக மாருத சண்டச்                சமரேறிக்

 ககன மறைபட ஆடிய செம்புட்

     பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்

     கடல்க ளெறிபட நாகமு மஞ்சத்     தொடும்வேலா

 கயிலை மலைதனி லாடிய தந்தைக்      

குருக மனமுள நாடியெ கொஞ்சிக்

     கனக சபைதனில் மேவிய கந்தப்       பெருமாளே 

 

பதம் பிரித்து உரை

 

குகனே குருபரனே என நெஞ்சில்

புகழ அருள் கொடு நாவினில் இன்ப

குமுளி சிவ அமுது ஊறுக உந்தி பசி ஆறி 

குகனே குருபரனே என = குகனேகுருபரனே என்று நெஞ்சில் புகழ = மனம் கொண்டு நான் புகழவும் அருள் கொடு = உன் திருவருளின் துணை கொண்டு நாவினில் = எனது உள் நாவில் இன்பக் குமுளி = இன்ப ரசத்தின் குமிழி பொங்க சிவ அமுது ஊறுக = சிவ அமுது ஊறுவதால் உந்திப் பசி ஆறி = வயிற்றுப்பசி ஆறி 

கொடிய இரு வினை மூலமும் வஞ்ச

கலிகள் பிணி இவை வேரொடு சிந்தி

குலைய நம சிவ ஓம் என கொஞ்சி களி கூர 

கொடிய இரு வினை = பொல்லாத இருவினைகளின் மூலமும் = மூலப் பகுதி வஞ்சக் கலிகள் = கொடிய கேடுகள் பிணி இவை = நோய்கள் இவை வேரொடு சிந்திக் குலைய = அடியோடு தொலைந்து போகவும் நம சிவ ஓம் என = நமசிவய ஓம் என்ற (மந்திரத்தை) கொஞ்சி = அன்புடன் ஓதி களி கூர = மகிழ்ச்சி நிரம்பவும் 

பகலும் இரவும் இலா வெளி இன்பு

குறுகி இணை இலி நாடக செம் பொன்

பரம கதி இதுவாம் என சிந்தித்து அழகாக 

பகலும் இரவும் இலா = பகலும் இரவும் இல்லாத வெளி = வெளியில் இன்பு = இன்பத்தை குறுகி = அணுகி அடைந்து  இணை இலி நாடக = ஒப்பிலாத (இறைவனுடைய) திருவிளையாடலும் செம் பொன் = செவ்விய அழகிய பரம கதி இதுவாம் என = பரமகதி இதுவேயாகும் என்று சிந்தித்து = உணர்ந்து    அழகாக = அழகிய நிலையைப் பெறவும் 

பவளம் அன திரு மேனியுடன் பொன்

சரண அடியவரார் ம(ன்)ன அம் பொன்

தருண சரண் மயில் ஏறி உன் அம் பொன் கழல் தாராய் 

பவளம் அன = பவளம் போன்ற திரு மேனி உடன் = திருவுருவத்துடன் பொன் சரண = அழகிய திருவடியை (அடைந்த) அடியவரார் = அடியார்கள் ம(ன்)ன = பொருந்த உடன் வர அம் பொன் = அழகிய பொலிவுள்ள தருண = இளமை (வாய்ந்த) சரண் = அடைக்கலம் தர வல்ல மயில் ஏறி = மயில் மீது ஏறி உன அம் பொன் = உனது அழகிய பொன் அனைய கழல் தாராய் = திருவடியைத் தந்து அருளுக 

தகுடஇயல் தாளம் 

தகுட தகுதகு இயல் தாளம் = தகுட என்று ஒலிக்கும் தாளமும் 

தபலை திமிலைகள் பூரிகை பம்பை

கரடி தமருகம் வீணைகள் பொங்க

தடி அழனம் உக மாருதம் சண்ட சமர் ஏறி 

தபலை = தபலை என்ற மத்தள வகை திமிலை = பறைவகை பூரிகை = ஊது குழல் பம்பை = பறவகை கரடி = கரடி கத்துவது போன்ற பறவகை தமருகம் = உடுக்கை வீணைகள் = வீணைகள் பொங்க = இவை எல்லாம் பேரொலி எழுப்ப தடி = கொல்லப்பட்ட அழனம் = பிணங்கள் உக = சிதறி விழ மாருத = வாயு வேகத்துடன் சண்டச் சமர் ஏறி = கொடிய போர் செய்யப் புகுந்து 

ககனம் மறை பட ஆடிய செம் புள்

பசிகள் தணிவுற சூரர்கள் மங்க

கடல்கள் எறி பட நாகமும் அஞ்ச தொடும் வேலா 

ககனம் = ஆகாயம் மறைபட = வந்து பந்தரிட்டது போல ஆடிய = கூத்தாடும் செம் = செவ்விய புள் = பறவைகளின் பசிகள் தணிவு உற = பசிகள் அடங்கவும் சூரர்கள் மங்க = சூரர்கள் அழியவும் கடல்கள் எறிபட = கடல்கள் அலையுண்ணவும் நாகமும் = அஷ்ட நாகங்களும் அஞ்ச = பயப்படவும் தொடும் வேலா = வேலைச் செலுத்தியவனே 

கயிலை மலை தனில் ஆடிய தந்தைக்கு

உருக மனம் முனம் நாடியே கொஞ்சி

கனக சபைதனில் மேவிய கந்த பெருமாளே  

கயிலை மலை தனில் = கயிலாய மலையில் ஆடிய தந்தை = திருவிளையாடல் செய்யும் தந்தையாகிய சிவபெருமானுக்கு உறுக மனம் = மனம் உறுக முனம் = முன்பு நாடியே= 

 விருப்பத்துடன் கொஞ்சி = அவருடன் கொஞ்சி விளையாடி கனக சபை தனில் = சிதம்பரத்தில் மேவிய கந்தப் பெருமாளே = வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே 


சுருக்க உரை 

குகனே குருபரனே என்று நான் புகழவும்உனதருளால் என் நாவில் இன்ப ரசம் பொங்கச் சிவ அமுது ஊறுவதால்கொடிய இரு வினைகள்நோய்கள் வேரோடு அழியநமசிவய ஓம் என்ற மந்திரத்தை அன்புடன் ஓதிபகல்இரவு இல்லாத வெளியில் இன்பத்தை அடைந்துஇறைவன் பர கதியைப் பெறும் நிலையைப் பெறவும்திருவுருவத்துடன் உன் திருவடியைஅடியார்கள் உடன் வரமயில் மீது ஏறி வந்து எனக்குத் தந்து அருள வேண்டும்.

தகுட முதலிய ஒலியுடன்பலவித பேரொலி எழுப்பபிணங்கள் சிதறி விழகொடிய போர் செய்துபறவைகள் பசி அடங்கவும்சூரர்கள் அழியவும்கடல் பொங்கவும்அஷ்ட திக்கு நாகங்கள் பயப்படவும் செலுத்திய வேலனே! கயிலை மலையில் திருவிளையாடல் செய்யும் தந்தையாகிய சிவபெருமானுக்கு முன்புமனம் உருககொஞ்சி விளையாடிசிதம்பரத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே! உன் பொற் கழல்களைத் தர வேண்டும் 

ஒப்புக 

சிவவமுது தூறுக

சிவமா துடனே அநுபோ கமதாய்

சிவஞா னமுதே பசியாறித்     

                                ---திருப்புகழ், சிவமாதுடனே 

வஞ்சக் கலிகள் பிணியிவை

வஞ்சம் = கொடுமை

வடி விளங்கு வெண்மழுவாள் வல்லார்போலும்

வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்

                                --- திருநாவுக்கரசர் தேவாரம்

நமசிவ யோமென கொள்சி 

நமசிவய = இது ஸ்தூல பஞ்சாக்ஷரம் 

புயப்பணி கடப்பந் தொடைச்சி கரமுற்றின்

புகழ்ச்சிய முதத்திண் புலவோனே

                                      --- திருப்புகழ், கரிக்குழல் 

பகலு மிரவு லாவெளி 

வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற

திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி

                                  --- திருப்புகழ், முகத்தைமினு

பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச

                                      --- கந்தர் அலங்காரம்  







No comments:

Post a Comment