பின் தொடர்வோர்

Wednesday 21 July 2021

461.கீத விநோத

 461

திருவருணை

       தானன தான தத்த        தனதானா

 

கீத விநோத மெச்சு         குரலாலே

   கீறு மையார் முடித்த     குழலாலே

நீதி யிலாத ழித்து           முழலாதே

   நீமயி லேறி யுற்று      வரவேணும்

சூதமர் சூர ருட்கப்           பொருசூரா

   சோண கிரியி லுற்ற       குமரேசா

ஆதியர் காதொ ருச்சொ  லருள்வோனே

  ஆனைமுகார் கனிட்ட    பெருமாளே

    

பபதம் பிரித்து உரை

கீத விநோதம் மெச்சு(ம்) குரலாலே

கீறும் மை ஆர் முடித்த குழலாலே 

கீத விநோதம் - ராக விநோதங்கள் அமைந்துள்ளமை பற்றி மெச்சு - மெச்சக் கூடிய குரலாலே - குரலின் இனிமையைக்

கண்டும் கீறும் - வகிர்ந்து வாரப்பட்டதும் மை ஆர் – கரு நிறம் நிறைந்ததும் முடித்த - முடி போடப்பட்டதுமான குழலாலே - கூந்தலைக் கண்டும்

 நீதி இலாது அழித்தும் உழலாதே

நீ மயில் ஏறி உற்று வரவேணும் 

நீதி இலாது - நீதி என்பதே இல்லாத வகையில் அழித்தும் - அழிக்கத் தக்க செயல்களைச் செய்தும் உழலாதே - நான்

திரியாதிருக்க நீ மயில் ஏறி உற்று - நீ மயில் மீது மனம் பொருந்தி வரவேணும் - வந்தருள வேண்டும்

 சூது அமர் சூர் உட்க பொரு சூரா

சோண கிரியில் உற்ற குமரோசா 

சூது - சூதான எண்ணங்களைக் கொண்ட சூரர் - சூரர்கள் உட்க - பயப்படும்படி பொரு சூரா - சண்டை செய்கின்ற வலிமை உடையவனே சோண கிரியில் - திருவண்ணா மலையில் உற்ற குமரேசா - வீற்றிருக்கும் குமரேசனே

ஆதியர் காது ஒரு சொல் அருள்வோனே

ஆனை முகார் கனிட்ட பெருமாளே

ஆதியர் - சிவபெருமானது காது - காதில் ஒரு – ஒப்பற்ற சொல் அருள்வோனே - சொல்லை (பிரணவத்தை) உபதேசித்தவனே ஆனை முகார் - ஆனை முகத்தை உடைய விநாயகருடைய கனிட்ட - தம்பியாகிய பெருமாளே - பெருமாளே

[கனிட்ட – கனிஷ்ட]

  சுருக்க உரை

ராக விநோதங்கள் அமைந்த மெச்சக் கூடிய குரலையும், வகிர்ந்து வாரப்பட்டதுமானதும், கரிய நிறம் உடையதும், முடி போட்டதுமான கூந்தலையும் உள்ள விலை மாதர்களைக் கண்டு, மயங்கி, கீழான செய்கைகளைச் செய்து நான் திரியாதிருக்க, நீ மயில் மேல் வந்து அருள் செய்ய வேண்டும்.

 வஞ்சக எண்ணங்கள் கொண்ட சூரர்கள் அஞ்சப் போர் செய்த சூரனே! சோணை மலையில் வீற்றிருக்கும் குமரேசனே! சிவபெருமானுக்குப் பிரணவத்தை உபதேசம் செய்தவரே! ஆனை முகக் கணபதிக்குத் தம்பியே! நீ மயில் ஏறி வரவேணும்.

 

 

சூதமர் சூரர் உட்க

சூதம் அமர் சூரர் எனக் கொண்டு மாரமாய் நின்ற சூரபதுமர் என்றும்

பொருள் கொள்ளலாம்


பாடலை கேட்க         rev 9-8-2022



No comments:

Post a Comment