காஞ்சீபுரம்
              தத்தத் தத்தத் தனதான
முட்டுப் பட்டு           கதிதோறும் 
   முற்றச் சுற்றிப்        பலநாளும் 
தட்டுப் பட்டுச்         சுழல்வேனைச்
   சற்று பற்றக்          கருதாதோ
வட்டப் புட்பத்             தலமீதே 
   வைக்கத் தக்கத்        திருபாதா 
கட்டத் தற்றத்         தருள்வோனே 
   கச்சிச் சொக்கப்       பெருமாளே
பதம் பிரித்து உரை
முட்டு பட்டு
கதி தோறும்
முற்ற சுற்றி
பல நாளும்
முட்டப் பட்டு - சங்கடப் பட்டு
கதி தோறும் - (தேவ, மனித, நரக, விலங்கு என்னும்) நாற்கதிகளிலும்
முற்றச் சுற்றி -
முழுமையும்
அலைந்து பல நாளும் - பல நாளும்
தட்டு பட்டு சுழல்வேனை
சற்று பற்ற கருதாதோ
தட்டப்பட்டு - தடுமதடுமாறுதல் அடைந்து சுழல்வேனை – சுழல்கின்ற என்னை சற்றுப் பற்ற - சிறிது ஆண்டு கொள்ள கருதாதோ - நினைக்கலாகாதோ?
வைக்க தக்க திரு பாதா
வட்டப் புட்ப - வட்டமாகிய இருதய கமல
தலம் மீதே - பீடத்தின் மேல்
வைக்கத் தக்க - வைத்துப்
பூசிக்கத் தக்க திரு - அழகிய  பாதா - திருவடிகளை உடையவனே
கச்சி சொக்க பெருமாளே
கட்டத்து அற்றத்து  - துன்பப்படும் சமயத்தில்
அருள்வோனே - அருள் புரிபவனே
கச்சிச் சொக்கப் பெருமாளே – கச்சியில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே
சுருக்க உரை
வீற்றிருக்கும் அழகிய பெருமாளே என்னைக் சற்றுக் கவனித்து ஆட்கொள்ள வேண்டுகின்றேன்
விளக்கக் குறிப்புகள்

No comments:
Post a Comment