திருவருணை
  
             தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத் 
               தனத்தா
தனத்தத்                         தனதான 
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக் 
   கடுத்தாசை
பற்றித்              தளராதே 
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட் 
   டறப்பே தகப்பட்               டழியாதே
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக் 
   கலிச்சா கரத்திற்               பிறவாதே
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக் 
   கலைப்போ தகத்தைப்         புகல்வாயே
ஒருக்கால் நினைந்திட் டிருக்கால் மிகுந்திட் 
   டுரைப்பார்கள்
சித்தத்       துறைவோனே 
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட் 
   டோளித்தோடும்
வெற்றிக்        குமரேசா 
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச் 
   செருச்சூர்
மரிக்கப்          பொரும்வேலா 
திறப்பூ  தலத்திற்
றிரட்சோ ணவெற்பிற் 
   றிருக்கோ புரத்திற்            பெருமாளே
பதம் பிரித்து உரை 
அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு 
அடுத்த ஆசை பற்றி தளராதே 
அருக்கார் - அருமை வாய்ந்த நலத்தை - உடல்) நலத்தை திரிப்பார்
- கெடுப்பவர்களான (விலை மாதர்களுடைய) மனத்துக்கு
- மனத்துக்கு அடுத்து
- இயைந்த ஆசை
பற்றி - ஆசை கொண்டு தளராதே
- சோர்வு அடையாமல்
அடல் காலனுக்கு கடை கால் மிதித்துட்டு 
அற பேதகப் பட்டு அழியாதே 
அடல் - வலிமை வாய்ந்த காலனுக்கு - நமனுக்கு கடைக்கால்
- (என் உயிரைக் கொள்வதற்கு
வேண்டிய) அடிப்படையை மிதித்திட்டு - கோலி அறப் பேதகப் பட்டு - மிகவும் மனம்
வேறு பாடு அடைந்து அழியாதே - அழியாமலும்
கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து 
கலி சாகரத்தில் பிறவாதே 
கருக்காரர் - பிறவிக்கு ஏதுவான செய்கையோரது நட்பைப்
பெருக்கா - நட்பை மிகக் கொண்டாடி
சரித்து - கைக்கொண்டு கலி - துன்ப சாகரம்
- கடலில் பிறவாதே - பிறவாமலும்
கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து 
கலை போதகத்தை புகல்வாயே 
கருத்தால் எனக்கு - நீ என் மீது அன்பு வைத்து திருத்தாள்
அளித்து - உனது திருவடியைத் தந்து
கலைப் போதகத்தை - கலை ஞானத்தை புகல்வாயே - உபதேசிப்பாயாக
ஒருக்கால் நினைந்திட்டு இருக்கால் மிகுத்திட்டு 
உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே 
ஒருக் கால் நினைந்திட்டு - ஒரு முறை உன்னைத் தியானித்து இருக்
கால் - (உனது) இரண்டு திரு
வடிகளையும் (ருக் ( இருக்கு)  மந்திரங்களால்
ஓதுதல் எனலுமாம்) மிகுத்திட்டு உரைப்பார்கள் - நிரம்ப உரைப்பவர் களுடைய சித்தத்து
உறைவோனே - மனதில் உறைபவனே
உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு 
ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா 
உர - வலிமையான தோளிடத்தில் - தோளில் குறத்
தேனை வைத்திட்டு - தேன் போல் இனிய குறப் பெண்ணான வள்ளியை ஒளித்தோடும் - மறைந்து ஓடின வெற்றிக்
குமரேசா - வெற்றி பொருந்திய
குமரேசனே
செருக்கால் தருக்கி சுர சூர் நெருக்கு அ 
செரு சூர் மரிக்க பொரும் வேலா 
செருக்கால் - ஆணவம் கொண்டு தருக்கி - கர்வம் கொண்டு சுரச்
சூர் -  தெய்வத் தன்மை உடைய தேவர்களை நெருக்கு - ஒடுக்கிய அச்
செருச் சூர் -  போருக்கு வந்த அந்த சூரன் மரிக்க
- இறக்க  பொரும் வேலா - சண்டை செய்த வேலனே
திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் 
திரு கோபுரத்தில் பெருமாளே 
திற - நிலை பெற்ற பூதலத்தில் - பூமியில் திரள்
சோண வெற்பில் - திரண்ட திரு அண்ணாமலையில்
திருக் கோபுரத்தில் பெருமாளே - அழகிய கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே
சுருக்க உரை 
வலிமையான தோள்களில் வள்ளியை மறைத்து ஓடிய குமரேசனே! ஆணவம் கொண்டு, தேவர்களைத் தாக்கிய சூரன் அழியும்படி போர் செய்தவனே! இப் பூமியில் திருவண்ணாமலையில் அழகிய கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! எனக்குக் கலை ஞானத்தை அருள்வாயாக
ஒப்புக
இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் 
ஒருகால்
நினைக்கில் இருகாலுந் தோன்றும் 
முருகாவென்
றோதுவார் முன் ---- திருமுருகாற்றுப்படை 
சோண வெற்பில்  
மலை அண்ணா மலை என்று பெயர் பெற்றது 

No comments:
Post a Comment