பின் தொடர்வோர்

Monday 7 March 2022

490. மனமே உனக்குறுதி

 490

சிதம்பரம்

 


மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்

        வருவா யுரைத்தமொழி                                                 தவறாதே

மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு

        மனமாயை யற்றசுக                                                    மதிபாலன்

நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல

        நிலைவே ரறுக்கவல                                                    பிரகாசன்

நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம

        நிழலாளி யைத்தொழுது                                            வருவாயே

இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய

        இளையோ ளொரொப்புமிலி                                    நிருவாணி

எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை

        யிதழ்வேணி யப்பனுடை                                             குருநாதா

முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர

        முதுசூ ரரைத்தலை கொள்                                     முருகோனே

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு

        முருகா தமிழ்ப்புலியுர்                                              பெருமாளே.

 


மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில்

வருவாய் உரைத்த மொழி தவறாதே 

மனமே -  மனமே உனக்கு -   உனக்கு     உறுதி புகல்வேன்- இந்த பரம ரகசியப் பொருளை திடத்தைத் தரும் சில சொற்களைக் கூறப்போகிறேன். [ இது போல் மனத்தை  விளித்து  கூறும் பாடல்கள் வேறு இரண்டு உள்ளன. 1. அந்தேயா மனமே 2. பாட்டிலுருகிலை. அநுபூதியில் மூன்று பாடல்கள். 1. கெடுவாய், 2. கைவாய்3. கிரிவாய் ] எனக்கு அருகில் வருவாய் - மிக அருகில் வந்து கேட்பாயாக  உரைத்த மொழி -  நீ உய்வதற்காக வழி உரைக்கிறேன் அதன்படி தவறாதே - நீ தவறாமல் நடக்க வேண்டும்

 மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கு அரசு

 மனமாயை அற்ற சுக மதி பாலன்

மயில் வாகனக் கடவுள்  - மயிலை வாகனமாகக் கொண்ட கடவுள்  அடியார் தமக்கு அரசு -  அவன் அடியார்கள் கூட்டதிற்கு என்றும் தலைவன்  மனமாயை அற்ற - மனம் மாயை என்பன இல்லாத சுக மதி பாலன் - சுக சொரூப அறிவு மயமான குழந்தைத் தெய்வம்

நினைவு ஏது உனக்கு அமரர் சிவலோக இட்டு  

மல நிலை வேர் அறுக்க வல பிரகாசன்

நினைவு ஏது உனக்கு - உனக்கு என்ன நினைவு உன் நினவுகளையும் அமரர் - தேவ லோகத்தையும் சிவலோக இட்டு -  சிவலோகத்தையும் தந்து  மல நிலை வேர் அறுக்க     - மும்மலங்களின் நிலைத்துள்ள வேறுகளை அறுக்கவல்ல பிரகாசன்  ஒளியுறுவானவன்

[இனிமேல் உனக்கு ஏன் வருத்தம்.? தேவலோக வாழ்வும் அதற்கு  மேல் சிவலோக வாழ்வும் அளித்து ( பரவு கற்பக தரு வாழ்வும்ஆசில் சிவகதி பெற்றிட என்பது அவர் வாக்கு). வருத்தங்களைப்  போக்கி நினைத்தது அனைத்தையும் பூர்த்தி செய்து பெருவாழ்வு  நல்குவான் என்பது குறிப்பு. ஒழியாத புயல் தங்கு புவனமும்  திசைமுக புத்தேள் பெரும் புவனமும் பொன்னுலகும்  மண்ணுலகும் எவ்வுலகு வேண்டினும் பொருள்  அன்று இவர்க்கு மற்று அழியாத வீடும் தரக்கடவன்முத்துக் குமார சுவாமி  பிள்ளைத் தமிழ். ). மலங்களின் மூல காரணங்களை வேருடன்  அழிக்க வல்ல ஜோதிப் பிரகாசன் ( நமது துன்பங்களுக்கு மூல காரணம் மும்மலங்கள் தான்அதில் ஆணவ மலம் ஆதியானது. அடியார்களிடம் உள்ள ஆணவ மலத்தை அழித்து எல்லாம் சிவன் செயல் என்ற பணிவைக் கொடுத்து அருள்வான். ஒளிக்கு முன்னால் இருள் மறைவது போல்  ஜோதி நடமிடும் பெருமாளுக்கு முன் ஆணவ இருள் ஒழிந்து போகும். அவனுடைய ஆயுதமும் சிந்தான ஜோதி கதிர் வேல். ) ]  

நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம்மம்

நிழலாளி தொழுது  வருவாயே

நிதி கா - சங்கநிதி பத்ம நிதி, கறபக மரம் போன்றவன் நமக்கு உறுதி அவரே - அவரே நமக்கும் உறுதிப் பொருள்   அவரே பரப்பிரம்ம - அவரே முழுமுதற் கடவுள் நிழலாளி  - அந்த நீதிமானை தொழுது  வருவாயே - தொழுது வழிபட்டு வருவாயே

[நமக்கு சங்க நதி, பதும நிதி, கற்பக விருட்சம் அனைத்தும் அவனே தான் ( நிதியே நித்தியமே என் நினைவே நற்பொருளாயோய்) நிலையான பொருளும் பரப்பிரமமும் அவனே ( பரம் பொருள் இந்த  தெய்வமா அல்லது அந்த தெய்வமா என திரிந்து உழலாதே. கந்த புராணத்தில் பிரம்மமாய் நின்ற ஜோதி முருகனைத் தவிர வேறு யாரும் கிடையாது என திடமாக நம்பு. மூவர் தேவர்கள் தம்பிரானே என்பதினால் திரிமூர்த்திகளுக்கும் ஏனைய தேவர்களுக்கும்  அவனே தலைவன் எனப் பெறப்படுகிறது) நீதி சொரூபனை வழிபட்டு வா (முருகன் அருள் நீதிமான். - அருள் நீத - வேதத்தின் முடிவு பொருளான நீதிமான், - மறை முடிவுற்ற பொருள் நீத -)]

இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய

இளையோள் ஒரு ஒப்பும் இலி    நிருவாணி

இனம் ஓது ஒருத்தி - நம்முடையவள் என்று  சொல்லக்கூடியவள் ருபி  -  ரூபி அழகுடையவள் நலம் ஏர் மறைக்கு அரிய - நலமும் அழகும் உடைய   வேதங்களுக்கு எட்டாதவள் இளையோள்  - என்றும் இளையாள்    ஒரு ஒப்பும் இலி -  ஒரு விதத்திலும் ஒப்புமை இல்லாதவள்  நிருவாணி  - திகம்பரி

[நமது உண்மைச் சுற்றம் என்று சொல்லக் கூடிய ஓப்பற்றவள் ( ஊர் பெற்றதாய் சுற்றமாய் உற்ற தாய் - திருப்புகழ் 1033 ), பேரழகி, நலமம் அழகும் உடைய வேதங்களுக்கு அரிய என்றும் இளையவள் ( பாலா ),  இணையற்றவள் ( நிருபா ) திகம்பரி, ]

எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை

இதழ் வேணி அப்பனுடை குருநாதா 

எனை ஈணெடுத்த - என்னைப் பெற்றெடுத்தவள் புகழ் கலியாணி - புகழ் பெற்ற கல்யாணியுமாகிய தலைவியை பக்கம் உறை - ஒரு பக்கத்தில் கொண்ட இதழ் வேணி அப்பனுடை - கொன்றைப்பூ அணிந்த சிவபிரானின்    குருநாதா - குருநாதரே

[என்னை ஞானப்பாலகனாகப் படைத்து காத்தருளிய புகழ் பெற்ற கலியாணி  ( இப்பேர்பட்ட  தேவியின் )  பாகத்தில் உவைகின்ற கொன்றைச் சடையினரின்  குருநாதனே]

முனவோர் துதித்து மலர் மழை போல் இறைத்து வர முது

சூரரை தலைகொள் முருகோனே

முனவோர் - முன்னவர்களான் அயன் அரி உருத்திரன் என்ற மூவர்களும்   துதித்து - துதி செய்து மலர் மழை  போல்  இறைத்து வர -  மலர்களை மழை போல் சொரிந்து வர முது சூரரை தலைகொள் - பழமை வாய்ந்த சூரனாதியோரின் தலைகளைக் கொய்தறுக்க முருகோனே - முருகக்கடவுளே

[முன்னோர்களான மும்மூர்த்திகளும் வணங்கி (படைத்து  அளித்து அழிக்கும் திரிமூர்த்திகள் தம்பிரானே)  பூ மாரி பெய்து  வர (முருகனென அண்டர் களி மலர் சிந்த),  சூரனட முதலிய  அசுரர்களின் தலையை அறுத்து முடித்த முருகோனே]

மொழி பாகு முத்து நகை மயிலாள் தனக்கு உருகும் முருகா

தமிழ் புலியுர்  பெருமாளே. 

பாகு மொழி - சர்க்கரைப் பகுபோன்ற மொழியும் முத்து நகை - முத்து போன்ற பற்களையும் உடைய மயிலாள் தனக்கு    - மயிலைப் போன்ற சாயலை உடைய வள்ளியின் பொருட்டு  உருகும் முருகா - உள்ளம் உருகும் முருக பெருமானே தமிழ் -  தமிழ் மணம் வீசும் புலியுர்   பெருமாளே - புலியூரில் உறையும் பெருமாளே

[சர்க்கரைப் பாகு போன்ற சொல்லும் முத்துப் போன்ற பற்களையும்

உடைய மயில் போல் வசீகரமும் யடைய வள்ளி நாச்சியாருக்கும் தேவயானைக்கும் மனம் உருகுகின்ற முருகப் பெருமானே. தமிழ் விளங்கும f புலியூரனே (பன்னிரு திருமுறை ஆசிரியர் அனைவராலும்  பாடப் பெற்றது சிதம்பரம் )] 

[உனது பிறவி நோயை ஒழிக்க முருகன் என்ற சிறந்த வைத்தியன் இருக்கிறான். கூப்பிடால் உடனே வருவானா என சந்தேகப்பட வேண்டாம்அவனுடைய வாகனம் அகில அண்டங்களையும் நொடிதில் சுற்றி வந்த பிரணவ மயில்என்னைப் போன்ற எளியோர்கள் கூபவபிட்டால் வருவானா என  சந்தேகப்பட வேண்டாம், அவன் அடியார்கள் கூட்டதிற்கு என்றும் தலைவன் மன மயக்கம் இல்லாத.( குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். ஆகையால் மனத்தில் அழுக்கு அற்று கூப்பிட்டால் குழந்தை போல குரல் கொடுப்பான் என்பது குறிப்பு. ]

 

[ ]  குறிக்குள் இருப்பன நடராஜன் அளித்த விளக்கம் 


rev 30-5-2022

பாடலை கேட்க




No comments:

Post a Comment