419
பொது
         தானத் தத்தத்
தத்தன தத்தத்   தனதான
வானப் புக்குப் பற்றும ருத்துக்                            னல்மேவு
   மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப்           பிறவாதே
ஞானச் சித்தித் சித்திர நித்தத்                           தமிழாலுன்
   நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப்                  புரிவாயே
கானக் கொச்சைச் சொற்குற விக்குக்              கடவோனே
   காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப்   பொரும்வேலா
தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத்           தொடையோனே
   தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப்                பெருமாளே.
பதம் பிரித்தல்
வான் அப்பு கு பற்று மருத்து
கனல் மேவு 
மாய தெற்றி பொய் குடில்
ஒக்க பிறவாதே
வான்
- ஆகாயம்.
அப்பு - நீர். கு - மண். பற்று - இவையுடன் கூடிய. மருத்து - காற்று. கனல் - தீ. மேவி - (ஆகிய பஞ்ச பூதங்கள்) சேர்ந்துள்ள மாய - நிலை இல்லாத. தெற்றி - ஒரு கட்டடமாகிய. பொய்க் குடில் ஒக்க - பொய்த் தோற்றமான இந்த உடலுடன். பிறவாதே - பிறவாமல்.
ஞான சித்தி சித்திர நித்தம்
தமிழால் உன் 
நாமத்தை கற்று புகழ்கைக்கு
புரிவாயே
ஞானச்
சித்தி - ஞானம் கைகூட. சித்திர - அழகுள்ள. நித்தம் - அழியாததான. தமிழால் உன் - தமிழ் கொண்டு. நாமத்தை - (முருகன், குமரன், குகன்) என்னும் உன்
நாமங்களை.
கற்றுப் புகழ்கைக்கு - கற்றுப் புகழ்வதற்கு. புரிவாயே - அருள் புரிவாயாக.
கான கொச்சை சொல் குறவிக்கு
கடவோனே 
காதி கொற்ற பொன் குல வெற்பை
பொரும் வேலா
கான
- காட்டில் வசித்தவளும்.
கொச்சைச் சொல் - திருந்தாத பேச்சை உடையவளும் ஆகிய. குறவிக்கு - வேடப் பெண்ணாகிய
வள்ளிக்கு.
கடவோனே - கடமைப் பட்டிருப்பவனே.
கொற்றம்
- வெற்றி பெற்றிருந்ததும். பொன் குல வெற்பை - பொன் மயமாக இருந்ததுமான கிரவுஞ்ச மலையை. காதி - கூறு செய்து. பொரும் வேலா - சண்டை செய்த
வேலனே.
தேனை தத்த சுற்றிய செச்சை
தொடையோனே 
தேவ சொர்க்க சக்கிரவர்த்தி
பெருமாளே.
தேனை
- வண்டுகளை.
தத்தி - தாவிக் குதிக்கும்படி. சுற்றிய - வைத்துச்
சுற்றி அணியப்பட்ட.
செச்சைத் தொடையோனே - வெட்சி மாலை அணிந்தவனே.
தேவச்
சொர்க்க - தேவர்கள் வாழும் பொன்னுலகில். சக்கிரவர்த்திப் பெருமாளே - சக்ரவர்த்திப்
பெருமாளே.
சுருக்க
உரை
பஞ்ச பூதங்கள் சேர்ந்துள்ள,
மாயம் நிறைந்த இவ்வுடம்புடன் இனி  நான் பிறவாமல்,
ஞானம் சித்திக்க, அழிவில்லாத தமிழைக் கொண்டு, உனது நாமங்கள் பலவற்றைக் கற்று, உனது
புகழ் பாடுவதற்கு அருள் புரிவாயக.
காட்டில் வசித்தவளும், திருந்தாத
பேச்சை உடையவளுமான வள்ளிக்குக் கடமைப் பட்டவனே. வெற்றி பெற்றிருந்ததும், பொன் மயமாக
இருந்ததுமான கிரவுஞ்ச மலையைக் கூறு செய்தவனே. வண்டுகள் தாவிக் குதிக்கும் வெட்சி மாலைகளை
அணிபவனே. பொன்னுலகத்தில் விளங்கும் சக்கிரவர்த்தி பெருமாளே. தமிழில் உன் நாமங்களைப்
பாட அருள் புரிவாயாக.
விளக்கக்
குறிப்புகள்
ஒப்புக
தமிழால் உன் நாமத்தைக் கற்றுப் புகழ்கைக்கு.... 
கனத்த
செந்தமி ழால்நினை யேதின 
நினைக்க
வுந்தரு வாயுன தாரருள்     ....திருப்புகழ், மனத்திரை
சிகராத்ரி
கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற் 
பகரார்வம்
ஈ                                          .....கந்தர் அலங்காரம்
கொச்சைச் சொற் குறவிக்குக் கடவோனே.... 
வள்ளியை ஆட்கொள்ள முருக வேள்
கடமைப் பட்டிருந்தார். 
கவர்பூ
வடிவாள் குறமா துடன்மால் 
கடனா
மெனவே அணைமார்பா ....திருப்புகழ், சிவமாதுடனே
மனம்,
மொழி, மெய்களால் தன்னையே நினைந்து தவப் பணி பூண்டிருந்த வள்ளியைப் புரத்தல் தணிகை நாயகருக்குக்
கடமை என்று முருக வேள் உணர்ந்தார். 
முகமாய
மிட்ட குறமாதி னுக்கு 
முலைமேல
ணைக்க வரு நீதா          ...திருப்புகழ், செகமாயை
(நீதி - கடன்).
No comments:
Post a Comment